ஜெனீவா விமான நிலையத்தில் இடம்பெற்ற பல மில்லியன் டொலர் பெறுமதியான ஆபரணக் கொள்ளை பற்றிய தகவல்களை வழங்குவோருக்கு ஒரு மில்லியன் டொலர் சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெனிவா விமான நிலையத்தில் இடம்பெற்ற பாரிய கொள்ளை சம்பவம் ஒன்றின் சந்தேக நபர்கள் இதுவரையில் கைது செய்யப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
கடந்த பெப்ரவரி மாதம் ஜெனீவா விமான நிலையத்தில் பல மில்லியன் டொலர் பெறுமதியான ஆபரணங்கள் மற்றும் கைக்கடிகாரங்கள் கொள்ளையிடப்பட்டிருந்தன.
இந்த கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை இதுவரையில் கைது செய்ய முடியவில்லை.
கடந்த பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி பிற்பகல் 3.30 மணி அளவில் விமான நிலைய வாகன தரிப்பிடத்தில் வாகனத்தை வழிமறித்து வாகனத்திற்குள் பயணித்தவர்கள் மீது கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டு இந்த பெறுமதி மிக்க பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன.
போலி பெல்ஜிய நாட்டு வாகன இலக்கத்தைப் பயன்படுத்தி வாகனம் ஒன்றின் மூலம் இந்த கொள்ளைச் சம்பவத்தை மேற்கொண்டவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
சந்தேக நபர்கள், ஆபரணங்களின் உரிமையாளர்கள் பயணம் செய்த காரின் கண்ணாடிகளை தாக்கி உடைத்து வாகனத்தில் இருந்த பெறுமதியான பொருட்களை களவாடிச் சென்றிருந்தனர்.
இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் பெல்ஜிய பொலிஸாருடன் இணைந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
பெல்ஜிய பொலிஸார் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பை வழங்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
மூன்று சந்தேக நபர்கள் கூட்டாக இணைந்து இந்த கொள்ளையை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபர்களை கைது செய்யவும் களவாடப்பட்ட ஆபரணங்களை மீட்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஜெனிவா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.