சுவிட்சர்லாந்தில் வீடுகளில் இடம் பெறும் விபத்து மரண சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
வீடுகள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்வுகளில் பங்கேற்கும் போதும் அதிக அளவு விபத்துக்கள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறான விபத்துகளில் பதிவாகும் மரணங்களின் எண்ணிக்கையும் சடுதியாக அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஒரு தசாப்த காலமாக இவ்வாறு வீடுகளில் இடம்பெறும் விபத்துகளினால் பதிவாகும் மரணங்கள் அதிகரிக்கின்றன.
சனத்தொகை பரம்பல் நிலைமை இந்த விபத்துக்கள் அதிகரிப்பதற்கான பிரதான ஏது என தெரிவிக்கப்படுகிறது.
முதியவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பு விபத்துகளின் போது மரணங்கள் பதிவாவது அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்து தடுப்பு பிரிவு இது தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளது.