உலகின் தலைசிறந்த நாடாக சுவிட்சர்லாந்து தெரிவு செய்யப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டுக்கான தரப்படுத்தலில் உலகின் தலைசிறந்த நாடாக சுவிட்சர்லாந்து தெளிவாகியுள்ளது.
யுஎஸ் நியூஸ் என்ட் வேர்ல்ட் ரிப்போர்ட் என்ற அமைப்பினால் வருடாந்தம் வெளியிடப்படும் அறிக்கையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டிலும் தலை சிறந்த நாடாக சுவிட்சர்லாந்து தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
உலகின் சுமார் 89 நாடுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த தரவரிசை தயாரிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
சுமார் 73 பிரிவுகளின் கீழ் இந்த தரப்படுத்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
வாழ்க்கை தரம், முன்னேற்றம், சமூக நோக்கம் முயற்சியான்மை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இந்த தரப்படுத்தலின் போது கவனம் செலுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
சுமார் 17000 பேரிடம் கடந்த மார்ச் மாதம் முதல் நடத்தப்பட்ட தகவல் திரட்டுகைகளின் அடிப்படையில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த தரவரிசையில் பல்வேறு விடயங்களில் சுவிட்சர்லாந்து முதனிலை வகிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
தொழில் ஒன்றை தொடங்குவதற்கு, நிறுவனமொன்றின் தலைமையகத்தை அமைப்பதற்கு, ஓய்வு பெற்றுக் கொள்வதற்கு என பல்வேறு விடயங்களில் மிகச்சிறந்த நாடாக சுவிட்சர்லாந்து அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
உலகின் மிகவும் வெளிப்படை தன்மையுடைய முதல் மூன்று நாடுகளில் சுவிட்சர்லாந்து இடம் பிடித்துள்ளது.
இந்த தரவரிசையில் இரண்டாம் இடத்தை ஜப்பான் பெற்றுக் கொண்டதுடன் மூன்றாம் இடம் அமெரிக்காவும் நான்காம் இடத்தை கனடாவும், ஐந்தாம் இடத்தை அவுஸ்திரேலியாவும் பெற்றுக் கொண்டுள்ளன.