அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில் பல்வேறு சம்பவங்களும் நிகழ்வுகளும் நாள்தோறும் பேசு பொருளாக மாறி உள்ளன.
அந்த வகையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்பின் பெயர் பொறிக்கப்பட்ட பிரசார தொப்பியை அணிந்த விவகாரம் சமூக ஊடகங்களில் பேசு பொருளாகியுள்ளது.
ஜோ பைடன் சில நிமிடங்களுக்கு டிரம்பின் தொப்பியை அணிந்திருந்தார்.
ஐக்கியத்தை வெளிப்படுத்தும் நோக்கில் இவ்வாறு தாம் ட்ரம்பின் பிரசார தொப்பியை அணிந்ததாக பைடன் தெரிவித்துள்ளார்.
ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹரிஸிடன் நடைபெற்ற விவாதத்தை தொடர்ந்து இவ்வாறு பைடன், டிரம்ப் பிரச்சார தொப்பியை அணிந்துள்ளார்.
வேட்பாளர்களுக்கு இடையிலான ஐக்கியத்தை வெளிப்படுத்தும் நோக்கில் சில நிமிடங்கள் ட்ரம்பின் பெயர் பொறிக்கப்பட்ட தொப்பியை அணிந்திருந்தார் என ஜனாதிபதி பைடனின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.