சுவிட்சர்லாந்தில் வெளிநாட்டு பிரஜைகளை இலக்கு வைத்து துண்டறிக்கை எச்சரிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு பிரஜைகளை இலக்கு வைத்து இந்த துண்டறிக்கை எச்சரிக்கை விடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
சுவிட்சர்லாந்து நாட்டை மோசமாக மாற்றியவர்கள் இந்த வெளிநாட்டு பிரஜைகளே என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கடந்த 2014 ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இருந்து பாரிய எண்ணிக்கையில் எண்ணிக்கையிலான குடியேறிகள் நாட்டுக்குள் பிரவேசிப்பதை தடுக்க வேண்டும் என கூறி சுவிட்சர்லாந்தில் நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பில் மக்கள் அந்தக் கோரிக்கையை ஆதரித்து வாக்களித்து இருந்தனர்.
எனினும் அரசாங்கம் இந்த பொது வாக்கெடுப்பு தீர்மானத்தை உதாசீனம் செய்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தொழில் தருனர்கள் மற்றும் வர்த்தகர்களின் அழுத்தம் காரணமாக இவ்வாறு சுவிஸ் அரசாங்கம் குடியேறிகள் பிரவேசிப்பதனை தடுக்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில் வெளிநாட்டு பிரஜைகளுக்கு எதிராக வெளியிடப்பட்டுள்ள இந்த துண்டறிக்கையானது அகதிகள் அல்லது ஏதிலி கோரிக்கையாளர்களை இலக்கு வைக்காது ஐரோப்பிய குடியேறிகளை பிரதானமாக இலக்கு வைத்து வெளியிடப்பட்டுள்ளது.
இந்த துண்டறிக்கையில் ஜெர்மனி, செக் குடியரசு, போலந்து, பிரான்ஸ், இங்கிலாந்து, ஸ்பெயின், போர்த்துகள் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளின் கொடிகள் உள்ளடக்கப்பட்டு உள்ளன.
அழகிய இந்த தேசத்தை வெளிநாட்டு ஆதிக்கத்திற்கு உள்ளாக்கியதாகவும், அதிகளவான சனத்தொகை உருவாகியுள்ளதாகவும், பொருட்களின் விலை அதிகரித்துள்ளதாகவும் கலாச்சார ரீதியான சீரழிவுகள் ஏற்பட்டுள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அதிக அளவான வெளிநாட்டு பிரஜைகள் வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டு பிரச்சினைகள் இந்த நாட்டை சீரழித்து விட்டதாக 78.2 வீதமான சுவிஸ் மக்கள் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் முன்னெடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பு மூலம் இந்த விடயம் தெரிவித்துள்ளது.
ஊடக நிறுவன அதிகாரிகள் உள்ளிட்ட பலருக்கு இந்த எதிர்ப்பு துண்டறிக்கைகளை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த துண்டறிக்கை குறித்த படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த துண்டறிக்கை தொடர்பில் சமூக ஊடகத்தில் பலரும் கருத்து வெளியிட்டுள்ளனர்.
இவ்வாறான எத்தனை துண்டறிக்கைகள் அனுப்பி வைக்கப்பட்டன என்பது குறித்து சரியான தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
பேர்ன், பேசல் மற்றும் லுசர்ன் ஆகிய பொலிஸார் இவ்வாறான துண்டறிக்கைகள் பற்றி எவ்வித தகவல்களும் தமக்கு தெரியாது என குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பில் எவரும் இதுவரையில் முறைப்பாடு செய்யவில்லை என தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவங்கள் தொடர்பில் சூரிச் பொலிஸார் தற்பொழுது விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்த துண்டு பிரசுரத்தை அனுப்பி வைத்தவர்களின் பெயர் விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.