சுவிட்சர்லாந்தின் பள்ளிக்கூடம் ஒன்றுக்கு குண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தின் வலாயிஸ் கான்டனின் சியரே நகரில் அமைந்துள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் இவ்வாறு குண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த குண்டு தாக்குதல் அச்சுறுத்தலை தொடர்ந்து பொலிஸார் குறித்த பகுதியை சோதனையிட்டுள்ளனர்.
இதே பாடசாலையில் கடந்த வெள்ளிக்கிழமையும் குண்டு தாக்குதல் தொடர்பில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது.
கடந்த வெள்ளிக்கிழமை குண்டு தாக்குதல் தொடர்பில் விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் போலியானது என பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் 14 வயதான சிறுவனை பொலிஸார் கைது செய்திருந்தனர்.