ஐரோப்பாவில் கடுமையான மழை வெள்ளம் காரணமாக நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பிய பிராந்தியங்களில் இவ்வாறு மழை பெய்துள்ளது.
பல ஆண்டுகளின் பின்னர் இவ்வாறு பிராந்தியத்தில் கடுமையான மழை பெய்துள்ளது.
தாழமுக்க நிலையினால் பலத்த காற்று மற்றும் மழை வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
ஐரோப்பாவின் ரொமானியா, வியன்னா, பிரஸ்டிஸ்லாவா மற்றும் பரகுவே சீரற்ற காலநிலையினால் கூடுதல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மழை வெள்ளம் காரணமாக ரொமானியாவில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
பெரும் எண்ணிக்கையிலான மக்கள் மழை வெள்ளம் காரணமாக இடம்பெயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.