சுவிட்சர்லாந்தில் விசேட தேவையுடைய பிள்ளையை படுகொலை செய்த பெற்றொருக்கு எட்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வடக்கு சுவிட்சர்லாந்தின் ஹெக்லின்கன் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கடுமையாக ஊனமுற்ற நிலையில் இருந்த குழந்தையை இவ்வாறு பெற்றோர் கொலை செய்துள்ளனர்.
32 வயதான பெண் மற்றும் 34 வயதான ஆண் ஆகியோருக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மூன்று வயதான மகளை இவர்கள் படுகொலை செய்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
சிறுமிக்கு போதைப்பொருள் வழங்கி மூச்சுத் திணறச் செய்து இந்த கொலை மம்றகொள்ளப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
மிகவும் மோசமாக நோய்வாய்ப்பட்டிருந்த தங்களது பிள்ளையை இந்தப் பெற்றோர் கொலை செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பிலான வழக்கினை விசாரணை செய்த நீதிமன்றம், குறித்த இருவருக்கும் இவ்வாறு தண்டனை விதித்துள்ளது.