சூரிச்சிலிருந்து நியூயோர்க் புறப்பட்ட விமானமொன்று அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
சுவிஸ் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான LX18 என்ற விமானமே இவ்வாறு தரையிறக்கப்பட்டுள்ளது.
விமானத்தின் கெபின் பகுதியில் காணப்பட்ட சீரற்ற அழுத்தம் காரணமாக விமானம் புறப்பட்டு சில நிமிடங்களில் தரையிறக்கப்பட்டுள்ளது.
சூரிச் விமான நிலையத்திலிருந்து அமெரிக்காவின் நியூயோர்க் நோக்கிப் பயணம் செய்த வேளையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சீரற்ற அழுத்தம் குறித்து விமானிக்கு அறிவிக்கப்பட்டதனைத் தொடர்ந்து விமானம் குறைந்த உயரத்தில் பறந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பயணிகளுக்கு ஒட்சிசன் முகக்கவசங்கள் வழங்கப்பட்டன.
விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்குவதற்கு வழமையாக இந்த முறைமை பின்பற்றப்படுகின்றது.
இந்த விமானத்தில் 205 பயணிகள் பயணித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எவ்வித அசம்பாவிதங்களும் இன்றி விமானம் பாதுகாப்பான முறையில் தரையிறக்கப்பட்டுள்ளது.