பிரித்தானியாவிற்கு பயணம் செய்வது தொடர்பிலலான புதிய நடைமுறைகளை அந்நாட்டு அரசாங்கம் அதிரடியாக அறிமுகம் செய்துள்ளது.
சுவிட்சர்லாந்து உள்ளிட்ட மேற்கு ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்களும் பிரித்தானியாவிற்கு பயணம் செய்வதற்கு இலத்திரனியல் பயண அங்கீகாரம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட உள்ளது.
உலகளாவிய ரீதியில் பிரித்தானியாவிற்கு பயணம் செய்வோருக்கு இலத்திரனியல் பயண அங்கீகாரம் வழங்கப்படுகின்றது. தற்பொழுது பிரித்தானியாவில் குறுகிய காலம் தற்காலிகமாக தங்குவதற்கு வீசா தேவையற்றவர்கள் மற்றும் பிரித்தானிய குடியேற்ற அந்தஸ்து ஏற்கனவே பெற்றுக்கொள்ளாதவர்கள் பிரித்தானியாவிற்கு பயணம் செய்வதற்கு இந்த புதிய இலத்திரனியல் பயண அங்கீகாரங்கள் (ETAs) அறிமுகம் செய்யப்பட உள்ளது.
- தகுதியுடைய ஐரோப்பியர் அல்லாதவர்கள் எதிர்ரும் 27 நவம்பர் 2024 முதல் முன்கூட்டியே விண்ணப்பிக்கலாம், 8 ஜனவரி 2025 முதல் பயணம் செய்ய ETA தேவைப்படும்.
- தகுதியான ஐரோப்பியர்கள் 5 மார்ச் 2025 முதல் விண்ணப்பிக்கலாம் மேலும் 2 ஏப்ரல் 2025 முதல் பயணம் செய்ய ETA தேவைப்படும்.
- பிரித்தானியாவிற்கு பயணம் செய்வோர் எப்போது பயணத்திற்கு ETA தேவைப்படும் ? என்பது குறித்து GOV.UK இணைய தளத்தின் ஊடாக கண்டறியலாம் என்பதுடன் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கவும் முடியும்
- இலத்திரனியல் பயண அங்கீகாரம் (ETA) பெற்றுக்கொள்ள ஒரு தடவைக்கு 10 ஸ்ரெலிங் பவுண்ட்கள் அறவீடு செய்யப்பட உள்ளது. இரண்டு ஆண்டுகள் அல்லது விண்ணப்பம் செய்பவரின் கடவுச்சீட்டு காலாவதியாகும் வரையில் இதில் எந்தக் காலம் முதலில் பூர்த்தியாகின்றதோ அதன் அடிப்படையில் கால அவகாசம் வழங்கப்படுகின்றது.
ஒரு தடவை ஆறு மாதங்கள் வரை அதிகபட்சமாக பிரித்தானியாவில் தங்கியிருக்க அனுமதிக்கப்பட உள்ளது.
ETAக்கான தகுதி
- குறுகிய காலம் தங்குவதற்கு வீசா தேவையில்லாத குழந்தைகள் உள்ளிட்ட அனைத்து வெளிநாட்டு பயணிகள் அல்லது வேறு எந்த பிரித்தானிய குடிவரவு அந்தஸ்தும் இல்லாதவர்கள் பிரித்தானியாவிற்குள் பிரவேசிக்கவும், பிரித்தானியா வழியாக செல்லவும் இந்த இலத்திரனியல் பயண அங்கீகாரம் தேவைப்படும்
- ETA என்பது ஒரு வீசா நடைமுறை கிடையாது, அது பிரித்தானியாவிற்குள் நுழைவதை அங்கீகரிக்காது என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒரு தனிநபர் பிரித்தானியாவிற்கு பயணம் செய்ய அனுமதி வழங்குகின்றது.
- பிரித்தானிய மற்றும் ஐரிஷ் பிரஜைகளுக்கு ETA அவசியமில்லை.
ETA பெற்றுக்கொள்ள விண்ணப்பித்தல்
- பிரித்தனரியாவிற்கு வருவதற்கு முன் யார் ETA ஐப் பெறலாம் மற்றும் எப்படி விண்ணப்பிப்பது என்பது பற்றிய தகவல்களை GOV.UK என்ற இணைய தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.
- Google Play அல்லது Apple App Store இலிருந்து பதிவிறக்கம் செய்யக்கூடிய ‘UK ETA ஆப்ஸ்’ மூலம் ETA க்கு விண்ணப்பிக்க எளிதான செயலியை தரவிறக்கம் செய்ய முடியும். ஸ்மார்ட்ஃபோன் அணுகல் இல்லாதவர்கள் GOV.UK இல் விண்ணப்பிக்கலாம்.
- விண்ணப்ப செயல்முறை விரைவானது மற்றும் எளிமையானது. விண்ணப்பதாரர்கள் வழக்கமாக மூன்று வேலை நாட்களுக்குள் விண்ணப்பம் பற்றிய முடிவுகளை பெற்றுக்கொள்ள முடியும். ஆனால் UK ETA app செயலியைப் பயன்படுத்தினால் விரைவான முடிவைப் பெறலாம்.
- ETA க்கு விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர்கள் செய்ய வேண்டியது:
o கட்டணம் செலுத்த வேண்டும்
o கடவுச்சீட்டு மற்றும் தொடர்புக்கொள்ளக்கூடிய விவரங்களை வழங்க வேண்டும்
GOV.UK இல் டிஜிட்டல் புகைப்படங்களுக்கான எங்கள் நியதிகளுக்கு இணங்க, சரியான புகைப்படத்தை வழங்க வேண்டும்
o கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்
- வருகையாளர்கள் ETA க்கு விண்ணப்பித்தபோது அவர்கள் பயன்படுத்திய அதே கடவுச்சீட்டைப் பயன்படுத்தியே பயணம் செய்ய வேண்டும்.
- ஒரு ETA விற்கான கட்டணம் 10 ஸ்ரெலிங் பவுண்ட்களாகும். அனைத்து கட்டணங்களையும் போலவே, ETA இன் விலையும் மதிப்பாய்வு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ETA வை பெற்றுக்கொள்வதற்கு பின்வரும் நாடுகளைச் சேர்ந்தவர்கள் தற்பொழுது விண்ணப்பம் செய்ய முடியும். அந்த நாடுகளாவன
பஹ்ரைன்
குவைத்
ஓமன்
கத்தார்
சவுதி அரேபியா
ஐக்கிய அரபு இராச்சியம்
இதேவேளை, எதிர்வரும் 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் மாதம் 27ம் திகதி முதல் பின்வரும் நாடுகள் மற்றும் பிராந்தியங்களைச் சேர்ந்தவர்கள் ETA பெற்றுக்கொள்ள விண்ணப்பம் செய்ய முடியும் என்பதுடன் 2025 ஜனவரி மாதம் 8ம் திகதி தொடக்கம் பயணம் செய்ய முடியும்.
ஆன்டிகுவா மற்றும் பார்புடா
அர்ஜென்டினா
ஆஸ்திரேலியா
பஹாமாஸ்
பார்படாஸ்
பெலிஸ்
போட்ஸ்வானா
பிரேசில்
புருனே
கனடா
சிலி
கொலம்பியா
கோஸ்டா ரிகா
கிரெனடா
குவாத்தமாலா
கயானா
ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பகுதி (வெளிநாட்டில் உள்ள பிரிட்டிஷ் தேசியம் உட்பட)
இஸ்ரேல்
ஜப்பான்
கிரிபதி
மக்காவோ சிறப்பு நிர்வாகப் பகுதி
மலேசியா
மாலத்தீவுகள்
மார்ஷல் தீவுகள்
மொரிஷியஸ்
மெக்சிகோ
மைக்ரோனேசியாவின் கூட்டாட்சி மாநிலங்கள்
நவ்ரு
நியூசிலாந்து
நிகரகுவா
பலாவ்
பனாமா
பப்புவா நியூ கினியா
பராகுவே
பெரு
சமோவா
சீஷெல்ஸ்
சிங்கப்பூர்
சாலமன் தீவுகள்
தென் கொரியா
செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ்
செயின்ட் லூசியா
செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ்
தைவான் (உங்களிடம் தைவானால் வழங்கப்பட்ட பாஸ்போர்ட் இருந்தால், அதில் தைவானில் உள்ள தகுதிவாய்ந்த அதிகாரியால் வழங்கப்பட்ட அடையாள அட்டையின் எண் அடங்கும்)
டோங்கா
டிரினிடாட் மற்றும் டொபாகோ
துவாலு
அமெரிக்கா
உருகுவே
இதேவேளை, எதிர்வரும் 2025ம் ஆண்டு மார்ச் மாதம் 5ம் திகதி முதல் பின்வரும் நாடுகள் மற்றும் பிராந்தியங்களைச் சேர்ந்தவர்கள் ETA பெற்றுக்கொள்ள விண்ணப்பம் செய்ய முடியும் என்பதுடன் 2025 ஏப்ரல் மாதம் 2ம் திகதி தொடக்கம் பயணம் செய்ய முடியும்.
அன்டோரா
ஆஸ்திரியா
பெல்ஜியம்
பல்கேரியா
குரோஷியா
சைப்ரஸ்
செக்கியா
டென்மார்க்
எஸ்டோனியா
பின்லாந்து
பிரான்ஸ்
ஜெர்மனி
கிரீஸ்
ஹங்கேரி
ஐஸ்லாந்து
இத்தாலி
லாட்வியா
லிச்சென்ஸ்டீன்
லிதுவேனியா
லக்சம்பர்க்
மால்டா
மொனாக்கோ
நெதர்லாந்து
நோர்வே
போலந்து
போர்ச்சுகல்
ருமேனியா
சான் மரினோ
ஸ்லோவாக்கியா
ஸ்லோவேனியா
ஸ்பெயின்
ஸ்வீடன்
சுவிட்சர்லாந்து
வாடிகன் நகரம்
இந்த புதிய நடைமுறையின் கீழ் சுவிட்சர்லாந்து உள்ளிட்ட அநேகமான மேற்கு ஐரோப்பிய நாடுகளது பிரஜைகள் பிரித்தானியாவிற்கு பயணம் செய்ய வேண்டுமாயின் இலத்திரனியல் பயண அங்கீகாரம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.