ஐரோப்பாவில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக உயர்வடைந்துள்ளது.
மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இந்த சீரற்ற காலநிலை நிலவி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மழை வெள்ளம் மற்றும் பொரிஸ் என்னும் புயல் காற்று தாக்கத்தினால் பெரும் அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
மத்திய ஐரோப்பாவில் வெள்ள நிலைமைகள் மோசமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த இரண்டு தசாப்தங்களில் என்றும் இல்லாத அளவிற்கு சீரற்ற காலநிலை மோசமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
செக் குடியரசுகள் மற்றும் போலந்து எல்லைப் பகுதிகள் சீரற்ற காலநிலையினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
போலந்து, செக் குடியரசு, ருமெனியா உள்ளிட்ட சில நாடுகளில் உயிர்ச் சேதங்கள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.