சுவிட்சர்லாந்தில் பெற்றோர், குழந்தைகளை துஷ்பிரயோகம் செய்வதனை தடுக்க விசேட சட்டமொன்றை உருவாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
வன்முறை இல்லாத கல்வியை வலியுறுத்தும் வகையிலான சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டுமென சுவிட்சர்லாந்து அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
வன்முறையை பிரயோகிக்காமல் குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்க பெற்றோரை வெளிப்படையாகவே வலியுறுத்தும் வகையிலான சட்டப் பரிந்துரை முன்மொழியப்பட்டுள்ளது.
தற்போது, குற்றவியல் சட்டத்தால் குழந்தைகள் வன்முறைக்கு எதிராக பாதுகாக்கப்படுகிறார்கள்.
ஆனால் இந்த விடயங்களை சிவில் சட்டத்திலும் இணைப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
உடல் ரீதியான தண்டனை அல்லது பிற இழிவான நடத்தை போன்ற வடிவத்தை எடுத்தாலும் அதனை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.