கலிபோர்னியாவை சேர்ந்த நபர் ஒருவர் விமான பணியாளரின் கழுத்தைப் பிடித்து தாக்கிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
அமெரிக்காவின் பொரன்டியர் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர் மீது இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.
30 வயதான சார்லஸ் ஏஞ்சல்ஸ் சால்வா என்ற நபர், விமான பணியாளரை கழுத்தைப் பிடித்து அனைவரையும் கொன்று விடுவதாக மிரட்டியுள்ளார்.
விமானத்தில் பயணம் செய்யும் அனைவரையும் தாம் கொலை செய்யப் போவதாக மிரட்டியுள்ளார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து குறித்த விமானம் செயின்ட் பிரான்சிஸ்கோவிற்கு திசை திருப்பப்பட்டு தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
விமான பணியாளரை தாக்கியமை பயணிகளை அச்சுறுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் குறித்த நபருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கலிபோர்னியாவில் இருந்து குறித்த விமானம் புறப்பட்டு சில நிமிடங்களில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த நபர் விமான பயணிகளை அச்சுறுத்தி பணியாளர்களின் பணியை முன்னெடுக்க முடியாது குழப்பியதாக தெரிவிக்கப்படுகிறது.
விமான பணியாளரை குறித்த நபர் உதைத்தார் எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.