ரஷ்ய ராணுவ படையினரின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உத்தரவிட்டுள்ளார்.
ராணுவத்தின் எண்ணிக்கை 180000த்தினால் அதிகரிக்குமாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்ததனை தொடர்ந்து மூன்றாவது தடவையாக இவ்வாறு ராணுவத்தின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளது.
இதன்படி ரஷ்யாவின் மொத்த படை எண்ணிக்கை 2.4 மில்லியனாக அதிகரிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் புதிய படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் படையினர் அண்மையில் ரஷ்யா மீது திடீர் தாக்குதல்களை நடத்தி இருந்தனர் இந்த எதிர்பாராத தாக்குதல்கள் காரணமாக ரஷ்ய படை பின்னடைவுகளை சந்தித்திருந்தது.
இவ்வாறான ஒரு பின்னணியில் இராணுவத்தின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு ரஷ்யா தீர்மானித்துள்ளது.