லெபனானில் pager தாக்குதல் நடைபெற்றுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் 2,750 பேர் வரை காயமடைந்துள்ளனர்.
இதில் சுமார் 200 பேர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல், ஹிஸ்புல்லா இயக்கத்தச் சேர்ந்தவர்கள் ஆயிரக் கணக்கில் இந்த சம்பவத்தில் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் போராளிகளுக்கு இடையே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ம் திகதி ஆரம்பமான போர் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்தப் போரில் இதுவரை, பல ஆயிரம் பேர் உயிரிந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று ஈரான் ஆதரவு பெற்ற லெபனானின் ஆயிரம் இடங்களில் இன்று சிறிய பேஜர் கருவிகளைக் கொண்டு தாக்குதல் நடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அலைபேசிகளை விடவும் பேஜர்களின் பட்டரிகள் நீண்ட ஆயுளைக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் சில தொழில்முறை தேவைகளுக்கு பேஜர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
பேஜர்களில் பயன்படுத்தப்படும் லித்தியம் பட்டரிகளை இஸ்ரேலிய படையினர் வெடிக்கச் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த பட்டரிகள் சுமார் 590 பாகை செல்சியஸ் அளவில் வெப்பமடைந்தால் வெடிக்கும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
பேஜர்கள் குறுஞ்செய்திகளை அனுப்பி வைப்பதற்காக பயன்டுத்தப்படுகின்றது.
அலைபேசி வலையமைப்புக்கள் தொழிற்படாத சந்தர்ப்பங்களிலும் பேஜர்களைக் கொண்டு தகவல்களை பரிமாறிக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
வானொலி அலைகளைக் கொண்டு இந்த பேஜர்கள் இயங்குகின்றன.
தகவல்களை இரகசிமாக பரிமாறிக்கொள்ளவும் இந்த பேஜர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான விசேட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பேஜரின் பாதுகாப்பு கட்டமைப்பினை ஊடறுத்து லெபனானில், இஸ்ரேல் படையினர் பேஜர்களை வெடிக்கச் செய்துள்ளனர்.