ஜனாதிபதி தேர்தலில் இறுதி பிரசார பேரணிகளுக்காக சுமார் 1500 பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு பிரசார கூட்டங்களுக்காக பயன்படுத்தப்படும் பஸ்களுக்காக 200 கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேசூரிய இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இவ்வாறு பஸ்களை வாடகைக்கு விட்டதன் மூலம் சுமார் 100 கோடி ரூபா வரையில் லாபம் கிடைக்கப்பெறும் என அவர் எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் பிரசாரப் பணிகள் பூர்த்தியாகும் இன்றைய தினத்தின் இறுதி கூட்டங்களுக்காக அரசியல் கட்சிகள் சுமார் 1500 பஸ்களை ஒதுக்கிக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதில் அதிக அளவான பஸ்களை தேசிய மக்கள் சக்தி ஒதுக்கீடு செய்துள்ளது என தெரிவித்துள்ளார்.
மேலும் தேர்தல் பணிகளுக்காக 500 பஸ்கள் வரையில் இலங்கை முழுவதும் சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் 20ம் திகதி நாடு முழுவதிலுமான பஸ் போக்குவரத்து 50 வீதத்தினால் குறைவடையும் என அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் நடைபெறும் தினத்தில் 10 முதல் 15 வீதமான பஸ்கள் மட்டும் சேவையில் ஈடுபடுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
தூரப் பகுதிகளுக்கான பஸ் சேவைகள் பெரிய அளவில் குறைவடையும் என இலங்கையில் தனியார் போக்குவரத்து பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேசூரிய தெரிவித்துள்ளார்.