இஸ்ரேலின் தெல் அவீவ் நகருக்கான விமான பயணங்களை சுவிட்சர்லாந்து சர்வதேச விமான சேவை மீண்டும் ரத்து செய்துள்ளது.
சூரிச் மற்றும் தெல் அவீவ் நகரங்களுக்கு இடையிலான விமான சேவை இவ்வாறு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்றும் நாளையும் இவ்வாறு விமான பயணங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் இடம் பெற்ற நிகழ்வுகளின் அடிப்படையில் இவ்வாறு இரண்டு தினங்களுக்கு விமான பயணங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்றும் நாளையும் இஸ்ரேல் மற்றும் ஈரான் வான் பரப்பை பயன்படுத்த போவதில்லை என சுவிஸ் சர்வதேச விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.
நிலைமைகளை கருத்தில் கொண்டு அடுத்த கட்ட நடவ நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விமான சேவை ரத்து காரணமாக பயணிகள் எதிர்நோக்கும் அசௌகரியங்களுக்கு விமான சேவை நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.
மேலும் விமான பயணங்களை மீள் பதிவு செய்து கொள்வதற்கும் கட்டணங்களையும் மீள செலுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் லெபனானில் பேஜர்கள் வெடிக்கச் செய்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஒன்பது பேர் கொல்லப்பட்டதுடன் 2750 காயமடைந்திருந்தனர்.
இந்த சம்பவம் மத்திய கிழக்கு நாடுகளில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.