உடல் உறுப்புகள் வயது மூப்படைவது ஏன் என்பது குறித்து சுவிட்சர்லாந்து ஆய்வாளர்கள் ஆய்வு நடத்தியுள்ளனர்.
சிலரது உடல் உறுப்புகள் ஏனையவர்களது உடல் உறுப்புகளை விட வேகமாக வயது மூப்படைவதற்கான காரணம் என்ன என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
விஞ்ஞான சஞ்சீகையான செல் என்ற சஞ்சிகையில் இது தொடர்பான ஆய்வு கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.
வயது மூப்பினை மந்தகதியாக்குவதற்கு வழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பேர்ன், ஜெனிவா உள்ளிட்ட பல்கலைக்கழகங்களினால் இந்த ஆய்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொருவரது உடல் உறுப்புகளும் எவ்வாறு வயது முப்படைகின்றது என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
அனைத்து கலன்களிலும் ஒரே விதமான தொழிற்பாடுகள் இடம்பெறுவது இல்லை என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சிலரது மரபணுக்களில் காணப்படும் இந்த கட்டமைப்பு வயது மூப்பை நிர்ணயிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
சில உடல் உறுப்புகளில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் தெளிவாக அறிந்து கொள்ள முடியும் என்பதுடன் சில உறுப்புக்களின் வயது மூப்பை அறிந்து கொள்ள முடியாது என தெரிவிக்கப்படுகிறது.
இதனால் புதிய முறைகளின் மூலம் இந்த குறையை நிவர்த்தி செய்து உடல் உறுப்புக்கள் வயது மூப்படைவதனை காலம் தாழ்த்த முடியும் என சுவிட்சர்லாந்து ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.