லெபனானில் பேஜர் தாக்குதலை தொடர்ந்து வோல்வி டாக்கி தாக்குதல் ஊடாக 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் சுமார் 300 பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளனர்.
லெபனானில் பேஜர் தாக்குதல்களைத் தொடர்ந்து வோல்கி டாக்கி கருவிகள் வெடித்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
பெய்ரூட்டின் தென்பகுதி புறநகர் ஒன்றில் 15 முதல் 20 தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.
மக்கள் பயன்படுத்திய வோல்கி டாக்கி கருவிக்ள வெடித்து சிதறியதில் இவ்வாறு உயிர்ச் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
அடுத்தடுத்து இரண்டு நாட்கள் இவ்வாறு பாரியளவு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பெர்துச் செயலாளர் அன்டனியோ குட்டாரஸ் தனது கரிசனையை வெளியிட்டுள்ளார்.
பேஜர் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்கான இறுதிக் கிரியைகளை குழப்பும் வகையில் இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.