சுவிட்சர்லாந்தில் இலங்கைப் பிரஜை ஒருவர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
34 வயதான இலங்கை பிரஜை ஒருவர் சுவிட்சர்லாந்தின் சூரிச் கான்டனின் கிளாட்பர்க் பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு தொகுதி ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் ஒர் படுகொலை என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த மரணத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் இரண்டு சுவிட்சர்லாந்து பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குடியிருப்பு தொகுதியில் வசித்து வந்த 40 மற்றும் 54 வயதான சுவிஸ் பிரஜைகளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த மரணம் தொடர்பில் தடயவியல் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் சுவிஸ் சூரிச் கான்டன் பொலிஸாரும் பொது வழக்குரைஞர் அலுவலகமும் விசாரணைகளை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸாருக்கு கிடைத்த அவசர அழைப்பின் பேரில் சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்துள்ளனர்.
இதன்போது குறித்து இலங்கையர் சலனமற்ற நிலையில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அவரது உயிரை காப்பாற்றுவதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வி அடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.