சுவிட்சர்லாந்தின் மொத்த சனத்தொகை ஒன்பது மில்லியனை கடந்துள்ளது.
கடந்த ஜூன் மாதம் சுவிட்சர்லாந்தில் நிரந்தரமாக வதியும் மக்களின் எண்ணிக்கை 9002763 ஆக காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.
12 ஆண்டுகளில் ஒரு மில்லியனினால் சனத்தொகை அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
கடந்த 2012ம் ஆண்டில் எட்டு மில்லியனாக இருந்த சுவிட்சர்லாந்தின் மொத்த சனத்தொகை ஒன்பது மில்லியனாக அதிகரித்துள்ளது.
20 முதல் 64 வயது வரையிலான 5.4 மில்லியன் மக்கள் வாழ்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.