அண்மையில் லெபனானில் பேஜர்கள் மற்றும் வால்கிடோக்கிகள் வெடித்து சிதறியதில் பலர் கொல்லப்பட்டனர்.
மேலும், பெரும் எண்ணிக்கையிலானவர்கள் காயமடைந்திருந்தனர்.
இவ்வாறு கொல்லப்பட்டவர்களில் சிறுவர்களும் உள்ளடங்குகின்றனர்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் மிகுந்த கரிசனையை வெளியிடுவதாக சுவிட்சர்லாந்து வெளிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதல்கள் பிராந்திய வலயத்தின் ஸ்திர தன்மையையும் பாதுகாப்பையும் மலினப்படுத்தும் வகையிலானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சட்டங்கள் மதிக்கப்பட வேண்டும் எனவும் சிவிலியன்கள் அனைத்து சந்தர்ப்பங்களையும் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லெபனானில் சுமார் ஆயிரம் சுவிட்சர்லாந்து பிரஜைகள் வசித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
லெபனானில் வாழ்ந்து வரும் சுவிஸ் பிரஜைகளை வெளியேறுமாறு அரசாங்கம் கோரியுள்ளது.