எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு கூடுதல் வெற்றி வாய்ப்பு காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்புகளின் ஊடாகவும் இந்த விடயம் தெரிய வந்துள்ளது.
நாளைய தினம் இலங்கையில் நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்ட ஒன்பதாவது ஜனாதிபதியை தெரிவு செய்யும் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க முதல் இடத்தை பெற்றுக் கொள்வார் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இரண்டாவது இடம் சஜித் பிரேமதாசவிற்கும், மூன்றாவது இடம் ரணில் விக்ரமசிங்கவிற்கும் கிடைக்க
க் கூடும் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்கள் சில வேலைகளில் மாற்றம் அடையலாம் எனவும் அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
எவ்வாறு எனினும் அனுரகுமார திசாநாயக்கன்பினால் 50 வீதத்திற்கு மேற்பட்ட வாக்குகளை பெற்றுக் கொள்ள முடியாத ஓர் சூழ்நிலையே தற்போது காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையின் முன்னணி கருத்துக் கணிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஐ.எச்.பீ எனப்படும் சுகாதார கொள்கை
நிறுவகத்தின் தகவல்களின் அடிப்படையில் அனுரகுமார திஸாநாயக்க முதல் இடத்தைப் பெற்றுக்கொள்வார் என தெரிவிக்கப்படுகின்றது.