இலங்கையில் தீர்மானம் மிக்க ஜனாதிபதி தேர்தல் நாளைய தினம் நடைபெற உள்ளது.
நாளைய தினம் காலை ஏழு மணி முதல் மாலை 4 மணி வரையில் தேர்தலில் மக்கள் வாக்களிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டில் 13,134 வாக்குச்சாவடிகளில் வாக்கெடுப்பு நடத்தப்படும் எனவும் சுமார் நாளை இரவு சுமார் 9.30 மணி அளவில் வாக்கு என்னும் பணிகள் ஆரம்பமாகும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டின் 22 மில்லியன் மொத்த சனத்தொகையைக் கொண்ட இலங்கையில் சுமார் 17 மில்லியன் பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுக் கொண்டுள்ளனர்.
18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் வாக்களிக்க தகுதி பெற்றுக் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பொலிஸ் ராணுவம் மற்றும் ஏனைய பொதுத்துறை சேவைகளில் பணியாற்றி வரும் அரசாங்க ஊழியர்கள் கடந்த 4, 5, 6, 11 மற்றும் 12ம் திகதிகளில் தபால் மூலம் வாக்களித்தனர்.
வாக்களிப்பின் போது வாக்குச்சாவடியில் வாக்காளர்கள் 3 வேட்பாளர்களுக்கு தங்களது விருப்பத் தெரிவினை மேற்கொள்ள முடியும்.
நேரடியாக ஒரு வேட்பாளருக்கு தங்களுடைய வாக்குகளை அளிக்கவும் முடியும்.
ஒருவருக்கு வாக்களிப்பவர்கள் நேரடியாக புள்ளடி இடுவதன் மூலமும், ஒன்றுக்கு மேற்பட்டவர்களுக்கு வாக்களிப்பவர்கள் ஒன்று, இரண்டு மற்றும் மூன்று என குறிப்பிட்டும் தங்களது வாக்கினை அளிக்க முடியும்.
தேர்தலில் வெற்றி ஏற்றுவதற்கு அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் வேட்பாளர் ஒருவர் 50 வீதத்திற்கு மேல் பெற்றுக்கொள்ள வேண்டும்.
எந்த ஒரு வேட்பாளரும் 50 வீத வாக்குகளைப் பெற்றுக் கொள்ளத் தவறினால் அதிக வாக்குகளை பெற்றுக் கொண்ட முதல் இரண்டு வேட்பாளர்கள் இரண்டாம் சுற்று வாக்கு என்னும் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவர்.
குறிப்பாக ஏனைய வேட்பாளர்கள் இந்த போட்டியிலிருந்து நீக்கப்படுவர்.
விருப்பு வாக்கு அடிப்படையில் இந்த வாக்கு எண்ணிக்கை மேற்கொள்ளப்பட்டு வெற்றியாளர் யார் என்பது தீர்மானிக்கப்படும்.
இலங்கை தேர்தலில் இம்முறை மொத்தமாக 39 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்திருந்தாலும் 38 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
ஒரு வேட்பாளர் முகமட் இலியாஸ் என்பவர் கடந்த மாதம் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
ரணில் விக்ரமசிங்க
இவர் ஆறு தடவைகள் நாட்டின் பிரதமராக கடமையாற்றியுள்ளார். ரணில் விக்ரமசிங்க கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஜனாதிபதியாக பதவியேற்றுக் கொண்டார். தற்பொழுது 75 வயதான ரணில் விக்ரமசிங்க இதற்கு முன்னர் 1999 மற்றும் 2005 ஆம் ஆண்டுகளில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டின் பொருளாதாரத்தை சரி செய்வதற்கு முக்கிய பங்களிப்பினை ரணில் விக்ரமசிங்க வழங்கியதாக போற்றப்பட்டாலும் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களை தண்டிக்கவில்லை என குறிப்பாக ராஜபக்ச குடும்பத்தை தண்டிக்கவில்லை என குற்றச்சாட்டு சுமக்கப்பட்டுள்ளது.
இம்முறை தேர்தலில் சுயாதீன வேட்பாளராக பணியில் போட்டியிடுகின்றார்.
அனுரகுமார திஸாநாயக்க
55 வயதான அனுரகுமார திசாநாயக்க தேசிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகியவற்றின் தலைவராக கடமை யாற்றுகின்றார். கடந்த 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் அனுகுமாரசநாயக்க போட்டியிட்டு தோல்வியடைந்திருந்தார்.
திசாநாயக்க நீண்ட காலமாக நாடாளுமன்றில் உறுப்புரிமை வகித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இம்முறை தேர்தலில் அதிக வெற்றி வாய்ப்பு காணப்படும் வேட்பாளராக சர்வதேச ஊடகங்கள் அனுரகுமார திசாநாயக்கவை அடையாளப்படுத்தியுள்ளன.
ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும், அரசாட்சியில் மாற்றம் செய்யப்படும், வீண் விரயம் தடுக்கப்படும், அனைத்து மதங்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும் என அனுரகுமார திஸாநாயக்க உறுதியளித்துள்ளார்.
சஜித் பிரேமதாச
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரான சஜித் பிரேமதாச 57 வயதுடையவராவார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் புதல்வர் ஆவார். கடந்தார் 2009 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச போட்டியிட்டு தோல்வியை தழுவிய இழந்தார்.
நாமல் ராஜபக்ஷ
நாமல் ராஜபக்ஷ இந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் மிகவும் இள வயது வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ என்பது குறிப்பிடத்தக்கது.
38 வயதான நாமல் ராஜபக்ச, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வராவார். நாமல் நீண்ட காலம் அரசியலில் ஈடுபட்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரையில் அமைச்சராகவும் கடமையாற்றியுள்ளார்.
இலங்கை தேர்தலில் இம்முறை பொருளாதார நிலைமைகள் மிக முக்கியமான ஒரு ஏதுவாக காணப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையில், சிறந்த பொருளாதாரக் கொள்கைகளை முன் வைக்கும் வேட்பாளர்களுக்கு கூடுதல் வெற்றி வாய்ப்பு காணப்படுவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
ஹம்பாந்தோட்டை, காலி, மாத்தறை, குருணாகல், அனுராதபுரம் மற்றும் பொலனறுவை போன்ற மாவட்டங்களில் அனுரகுமார முன்னிலை வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கண்டி, நுவரெலியா, பதுளை, முல்லைத்தீவு, வன்னி, யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, திருகோணமலை, அம்பாறை, மட்டக்களப்பு, கம்பஹா, புத்தளம் போன்ற மாவட்டங்களில் ரணில் மற்றும் சஜித் முன்னிலை வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.