நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க வெற்றியீட்டியுள்ளதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி அனுரகுமார திஸாநாயக்க 50 வீதத்திற்கு மேற்பட்ட வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளார்.
அடுத்தபடியாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச இரண்டாம் இடத்தையும், ரணில் விக்ரமசிங்க மூன்றாம் இடத்தைம் பெற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நான்காம் இடம் நாமல் ராஜபக்சவிற்கு கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தேசிய தேர்தல் ஆணைக்குழுவினால் இந்த தகவல்கள் இன்னமும் உறுதி செய்யப்படவில்லை என்பதுடன் அதிகாரபூர்வமற்ற வகையில் இந்த தகவல்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
அதிகாரபூர்வமாக வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை.