இலங்கையின் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது விமான நிலையத்தில் சுமார் 200 விமானப்படையினர் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விசேட நடவடிக்கை ஒன்றின் நிமித்தமே இந்த பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கலாம் எமது செய்தியாளர் அறிவித்துள்ளார்.
விமான நிலையத்துக்கு வரும் பயணிகள் மற்றும் வாகனங்கள் கடுமையான சோதனைக்குட்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.