ஊரடங்கு சட்ட நேரத்தில் பயணங்களை மேற்கொள்ளும் பயணிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
ஊரடங்குச் சட்ட காலத்தில் பயணம் செய்வதற்கான அனுமதிப்பத்திரமாக பயண ஆவணங்களை பயன்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் பயணிகளும் வெளிநாடுகளிலிருந்து வருகை தந்து வீடுகளுக்கு திரும்பும் பயணிகளும், இவ்வாறு பயண ஆவணங்களை அனுமதிப்பத்திரமாக பயன்படுத்திக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் நாடு தழுவிய அடிப்படையில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.