ஜனாதிபதித் தேர்தலில் இதுவரையில், அமைதியான முறையில் வாக்களிப்பு நடைபெற்று வருவதாக தேர்தல் பணியகம் அறிவித்துள்ளது.
தேர்தல் நடவடிக்கைகளின் பாதுகாப்பையும் ஒருமைப்பாட்டையும் உறுதிப்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
தேர்தல் கடமைகளுக்காக 63,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சட்டத்தரணியுமான நிஹால் தல்துவா உறுதிப்படுத்தியுள்ளார்.
இதுவரையில் எந்தவித முரண்பாடுகளும் ஏற்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முக்கிய பாதுகாப்பு இடங்களில் பொலிஸாருக்கு மேலதிகமாக ஆயுதப்படையும் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
சுதந்திரமான தேர்தலை நடத்துவதற்கு தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு மக்களுக்கு உறுதியளித்துள்ளது.