திருகோணமலை மாவட்டத்தின் மூத்த குடிமகன் தனது 106ஆவது வயதில் 9ஆவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தலில் வாக்கினை பதிவு செய்துள்ளார்.
திருகோணமலையின் மூத்த பிரஜையான ஜோன் பிலிப் லூயிஸ் என்பவரே இவ்வாறு வாக்களிப்பினை மேற்கொண்டுள்ளார்.
நாட்டில் இதுவரை காலமும் குறிப்பாக ஒன்பது தடவையாக இடம்பெறுகின்ற ஜனாதிபதி தேர்தல்களிலும் தனது வாக்கினை பதிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், “நல்லதோர் ஆட்சியாளர் வரவேண்டும் என்பதே தனது எதிர்பார்ப்பு” எனவும், இறைவனது ஆசியுடன் எதிர்வரும் காலங்களில் இடம்பெறும் தேர்தலிலும் வாக்களிக்க தயாராக இருக்கின்றேன்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.