இலங்கையில் இன்றைய தினம் நடைபெற்று வரும் ஜனாதிபதி தேர்தலுக்காக விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நாடளாவிய ரீதியாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு அண்மித்த பகுதிகளில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தேர்தல் பாதுகாப்பு கடமைகளுக்காக பொலிஸார் உள்ளிட்ட 80,000 பாதுகாப்பு தரப்பினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
சகல வாக்களிப்பு நிலையங்களுக்கும் தலா 2 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பாதுகாப்புப் படையினரின் ஒத்துழைப்பும் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும், பல்வேறு இடங்களில் விசேட சோதனைச் சாவடிகள் நிறுவப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.