இன்றைய தினம் நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலின் போது வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணும் நிலையங்களில் சட்டவிரோத செயற்பாடுகள் தவிர்க்கப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
இதற்கமைய வாக்களிப்பு நிலையங்களில் கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்துதல், புகைப்படம் எடுத்தல், காணொளிப் பதிவு செய்தல், ஆயுதங்களை தம்வசம் வைத்திருத்தல் என்பனவற்றுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை வாக்களிப்பு நிலையங்களுக்குள் நுழைய அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் தொடர்பான அறிவிப்பையும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் வெளிப்படுத்தியுள்ளார்.
இன்று நடைபெறுகின்ற 2024 ஜனாதிபதித் தேர்தலுக்கு வாக்களிக்க உங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தககூடிய பின்வரும் ஆவணங்களில் ஒன்றை எடுத்துச் செல்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
* தேசிய அடையாள அட்டை
* செல்லுபடியாகும் கடவுச்சீட்டு
* செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம்
* பொது சேவை ஓய்வூதிய அடையாள அட்டை
* முதியோர் அடையாள அட்டை
* மதகுருமார்களுக்கான அடையாள அட்டை
* தேசிய அடையாள அட்டை தகவலை உறுதிப்படுத்தும் கடிதம்
* மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்தல் ஆணைக்குழுவால் வழங்கப்படும் தற்காலிக அடையாள அட்டை
* ஏனைய நபர்களுக்கு தேர்தல் ஆணைக்குழுவால் வழங்கப்படும் தற்காலிக அடையாள அட்டை
மேற்படி ஏற்றுக்கொள்ளப்பட்ட 9 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை சமர்ப்பிக்க முடியும் என தேர்தல் ஆணைக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.