தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இன்றைய தினம் ஜனாதிபதியாக பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நேற்றைய தினம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் அனுர அமோக வெற்றியீட்டுவார் என தேசிய மக்கள் சக்தியின் சிரேஸ்ட தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதன் அடிப்படையில் அனுரகுமார திஸாநாயக்க இன்றைய தினம் பதவி ஏற்கக்கூடிய சாத்தியம் அதிகளவில் காணப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
வாக்கு எண்ணும் நிலையங்களில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள தமது கட்சி பிரதிநிதிகள் தேர்தல் முடிவுகள் தொடர்பில் தகவல் வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதன் அடிப்படையில் 50 வீதத்திற்கு அதிகமான வாக்குகளை அனுர பெற்றுக்கொள்வார் எனத் தெரிவித்துள்ளார்.
அதிகாரபூர்வ தேர்தல் முடிவுகள் வெளியானதன் பின்னர் அவர் பதவி ஏற்றுக்கொள்வார் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்றைய தினம் பதவியை துறப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.