இலங்கையின் 9ம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக இரண்டாம் சுற்று வாக்கு எண்ணப்பட உள்ளது.
இதன்படி, தேர்தலில் முன்னிலை வகிக்கும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையில் இந்தப் போட்டித் தன்மை நிலவுகின்றது.
இந்த இரண்டு வேட்பாளர்களும் 50 வீத வாக்குகளைப் பெற்றுக்கொள்ளாத நிலையில் விருப்பு வாக்கு எண்ணிக்கையை கணக்கிடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட உள்ளன.
தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரட்நாயக்க இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
விருப்பு வாக்கு எண்ணிக்கை வேட்பாளர்களின் வாக்கு எண்ணிக்கையுடன் கூட்டி அதிக வாக்கு பெறுபவர் நாட்டின் ஜனாதிபதியாக நியமிக்கப்பட உள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் மற்றும் மூன்றாம் சுற்று விருப்பு வாக்குகளையும் பெற்றுக்கொண்ட விருப்பு வாக்குகளுடன் கூடிய அதிக வாக்கு பெறுபவர் வெற்றியாளர் என அறிவிக்கப்பட உள்ளார்.