தொகுதி அடிப்படையில் விருப்பு வாக்கு கணக்கிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட ரீதியில் தொகுக்கப்பட்டு அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும் இரண்டு வேட்பாளர்களும் முதல் சுற்றில் பெற்றுக்கொண்ட வாக்குகளுடன் விருப்பு வாக்குகள் சேர்க்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முதல் சுற்று மற்றும் இரண்டாம் விருப்புத் தெரிவு என்பனவற்றில் கூடுதல் வாக்குகளை பெறும் வேட்பாளர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
மாவட்ட ரீதியிலான தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் யார் வெற்றியாளர் என்று தீர்மானிக்கப்பட உள்ளது.