நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் அனுரகுமார திஸாநாயக்க முன்னிலை வகிக்கின்றார்.
அனுரகுமார தேர்தலில் வெற்றியீட்டியதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
அனுர இன்றைய தினம் மாலை அநேகமாக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளத் திட்டமிட்டுள்ளார்.
இதேவேளை, பிரதமராக கலாநிதி ஹரினி அமரசூரிய நியமிக்கப்படலாம் எனவும், அனுரவின் நாடாளுமன்ற வெற்றிடத்திற்கு தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்படலாம் எனவும் கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் அடிப்படையில் சிறு அமைச்சரவை ஒன்றை நிறுவி, நாடாளுமன்றம் கலைக்கப்படக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை, அனுரகுமார திஸாநாயக்க அநேகமாக 50 வீத வாக்குகளைப் பெற்றுக்கொள்வார் என தெரிவிக்கப்படுகின்றது.