நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் செல்வாக்கு மிகு அரசியல் குடும்பமான ராஜபக்ச தரப்பிற்கு பாரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
தெற்கை மையமாகக் கொண்டு அரசியல் நகர்த்தல்களை முன்னெடுத்து வந்த ராஜபக்ச குடும்பம் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளது.
குறிப்பாக ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் ராஜபக்ச குடும்பத்தினர் பாரியளவு பின்னடைவை சந்தித்துள்ளனர்.
ராஜபக்சக்களின் கோட்டையாக கருதப்பட்ட ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் ராஜபக்ச குடும்பம் இம்முறை தேர்தலில் பாரிய தோல்வியைத் தழுவியுள்ளது.
குறிப்பாக பெலியத்த, திஸ்ஸமஹாராம, முல்கிரிகல மற்றும் தங்காலை தொகுதிகளில் ராஜபக்சக்கள் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளனர்.
இம்முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட நாமல் ராஜபக்ச மாவட்டத்தில் 10 வீத வாக்குகளைக் கூட பெற்றுக்கொள்ள முடியாத நிலை உருவாகியுள்ளது.