இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஒன்பதாம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் அனுரகுமார திஸாநாயக்க பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
ஜனாதிபதி செயலகத்தில் இந்த நிகழ்வு சற்று முன்னர் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் மதகுருமார், கட்சி முக்கியஸ்தர்கள், வெளிநாட்டு ராஜதந்திரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பங்குற்றிருந்தனர்.