இலங்கையில் அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் வெற்றி ஈட்டிய தேசிய மக்கள் சக்தி இன்றைய தினம் தனது அமைச்சரவையை நியமித்துள்ளது.
இந்த அமைச்சரவையில் மூன்று பேர் மட்டும் அங்கம் வசிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க
- பாதுகாப்பு
- நிதி, பொருளாதார அபிவிருத்தி, கொள்கை வகுப்பு, திட்டமிடல் மற்றும் சுற்றுலாத்துறை
- சக்தி வளம்
- விவசாயம், காணி, கால்நடை வளம், வடிகாலமைப்பு மீன்பிடித்துறை மற்றும் கடற்றொழிவளம்
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
- நீதி, பொது நிர்வாகம் மாகாண சபைகள், உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் தொழில்
- கல்வி, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம்
- மகளிர் சிறுவர் மற்றும் இளைஞர் விவகாரம், விளையாட்டுத்துறை
- வர்த்தகம், வாணிபம், உணவு பாதுகாப்பு கூட்டுறவு அபிவிருத்தி, கைத்தொழில் மற்றும் முயற்சியான்மை அபிவிருத்தி
- சுகாதாரம்
விஜித்த ஹேரத்
- பௌத்த சாசனம், சமய விவகாரம், கலாச்சாரம், தேசிய ஒருமைப்பாடு, சமூக பாதுகாப்பு மற்றும் வெகுஜன ஊடகம்
- போக்குவரத்து, பெருந்தெருக்கள், துறைமுகம் மற்றும் சிவில் விமான போக்குவரத்து
- பொது பாதுகாப்பு
- வெளி விவகாரம்
- சுற்றாடல், வன ஜீவராசிகள், வனவளம், நீர் விநியோகம், பெருந்தோட்டசமூகம், உட்கட்டமைப்பு
- கிராமிய மற்றும் நகர அபிவிருத்தி வீடமைப்பு
ஆகிய 15 அமைச்சுக்கள் இந்த மூவரினாலும் பொறுப்பேற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை, 15 அமைச்சு செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.