இலங்கையின் நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றை கலைப்பது குறித்த விசேட வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க கையொப்பமிட்டுள்ளார்.
இந்த ஆவணம் அரசாங்க அச்சக திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி நாடாளுமன்றம் வர்த்தமானி அறிவித்தலின் அடிப்படையில் அதிகாரபூர்வமாக கலைக்கப்பட உள்ளது.
விரைவில் இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.