புதிய அமைச்சரவை இன்றைய தினம் நியமிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
புதிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான புதிய அமைச்சரவை நியமிக்கப்பட உள்ளது.
நான்கு பேரைக் கொண்ட அசச்சரவை உருவாக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் பதவிக்கு கலாநிதி ஹரினி அமரசூரி நியமிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
15 அமைச்சுப் பதவிகள் நியமிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.
சுற்றுலாறத்துறை, பாதுகாப்பு, நிதி, நீதி, கைத்தொழில் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக ஜனாதிபதி பொறுப்பேற்றுக்கொள்வார் என தெரிவிக்கப்படுகின்றது.
புதிய பிரதமர் ஹரினி வெளிவிவகாரம், கல்வி, ஊடகம் உள்ளிட்ட அமைச்சுப் பதவிகளையும் வகிப்பார் என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விஜித ஹேரத் மற்றும் லக்ஸ்மன் நிபுணராச்சி ஆகியோரும் அமைச்சர்களாக பதவி ஏற்றுக்கொள்ள உள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.