முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீண்டும் பொதுத் தேர்தலில் போட்டியிட மாட்டார் என தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தேசியப் பட்டியல் ஊடாகவும் ரணில் மீண்டும் நாடாளுமன்றம் செல்ல திட்டமிடவில்லை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக தற்பொழுது வஜிர அபேவர்தன கடமையாற்றி வருகின்றார்.
எவ்வாறெனினும் தனது அரசியல் எதிர்காலம் தொடர்பில் ரணில் விக்ரமசிங்க எவ்வித தகவல்களையும் இதுவரையில் அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.