தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினராக கடமையாற்றி வந்த கலாநிதி ஹரினி அமரசூரிய பிரதமராக பதவி ஏற்றுக்கொண்டார்.
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் முன்னிலையில் அவர் இவ்வாறு பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
ஹரினி இலங்கையின் 16ம் பிரதமர் என்பதுடன், மூன்றாவது பெண் பிரதமர் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகின் முதல் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவும், அவரது புதல்வி சந்திரிக்கா பண்டாரநாயக்கவும் இலங்கையில் ஏற்கனவே பிரதமர் பதவிகளை வகித்துள்ளனர்.
இந்த நிலையில் இலங்கையில் கலாநிதி பட்டம் பெற்ற பெண் ஓருவர் முதல் தடவையாக பிரதமர் பதவி வகிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2020ம் ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் ஊடாக ஹரினி நாடாளுமன்றம் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.