5.6 C
Switzerland
Friday, October 4, 2024

ஆதரவளிக்காதோரின் மனங்களும் வென்றெடுக்கப்படும்

Must Read

ஜனாதிபதி தேர்தலின் போது ஆதரவு வழங்காதவர்களின் மனங்களையும் வென்றெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையின் போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

பல்வகைமையை ஏற்றுக்கொள்ளக் கூடிய அழகிய செலுமையான நாட்டை உருவாக்குவோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அனைத்து மக்களுக்கும் சட்டம் சமமானதாக அமுல்படுத்தப்படும் எனவும், மக்களின் வாழ்க்கைச் சுமை அதிகரிப்பினை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வாக்களிக்காத மக்களின் ஆக்கபூர்வமான விமர்சனங்களை ஏற்றுக்கொண்டு அனைவரையும் உள்ளடக்கிய கூட்டாண்மையுடன் கூடிய மூலோபாயங்கள் வகுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

மாற்றத்தை விரும்பியே மக்கள் தமக்கு ஆணை வழங்கியுள்ளதாகத் தெரிவித்தள்ளார்.

எனினும் இந்த மாற்றமானது கட்டம் கட்டமாக கொண்டு வரப்படும் எனவும், முதலில் நாட்டின் பொருளாதார ஸ்திரதன்மையை நிலைநாட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சிங்கள, தமிழ், முஸ்லிம், பர்கர் மற்றும் மலே உள்ளிட்ட அனைவரும் சமமாக நடத்தப்படுவர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கூட்டு முயற்சியின் ஊடாக பல்வேறு சவால்களை வெற்றிகொள்ள முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையின் கடவுச்சீட்டு கௌரவமான ஓர் கடவுச்சீட்டாக அனைத்து நாடுகளிலும் அங்கீகரிக்கப்படக்கூடிய கடவுச்சீட்டாக உருவாக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

உலகின் பல நாடுகளில் விமான நிலையங்களையும், மக்களின் நடத்தைகள் வீதிப் போக்குவரத்து போன்றவற்றைக் கொண்டு அந்த நாட்டின் நிலையை  அறிந்து கொள்ள முடியும் எனவும் அதேவிதமான ஒர் நிலையை இலங்கையிலும் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியாக பதவி ஏற்றதன் பின்னர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் அவர்இந்த விடயங்களை தெரிவித்துள்ளார்.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LATEST ARTICLES