6.1 C
Switzerland
Friday, October 4, 2024

இலங்கை புதிய பிரதமரின் இந்திய தொடர்பு…

Must Read

இலங்கையில் அண்மையில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தி ஆட்சியை கைப்பற்றியது.

குறிப்பாக ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க தெரிவு செய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து அந்த கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாட்டின் 16 ஆம் பிரதமராக நியமிக்கப்பட்டார்.

இவர் இலங்கையில் பிரதமராக பதவி வகிக்கும் மூன்றாவது பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகின் முதல் பெண் பிரதமரான சிறிமாவோ பண்டாரநாயக்க, அவரது புதல்வி சந்திரிகா குமாரதுங்க பண்டாரநாயக்க ஆகியோர் இதற்கு முன்னர் இலங்கையில் பிரதமராக பதவி வகித்துள்ளனர்.

இந்த நிலையில் ஹரிணி அமரசூரிய சிறந்த கல்விப்புலத்தைக் கொண்ட ஓர் அரசியல்வாதி என அடையாளப்படுத்தப்படுகின்றார்.

அவர் இந்தியாவுடன் பல்வேறு வகையிலான தொடர்புகளை பேணி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த விடயங்கள் குறித்து இந்திய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

54 வயதான ஹரிணி அமர சூரிய 1990 களில் ஹரிணி டெல்லி பல்கலைக்கழகத்தின் ஹிந்து கல்லூரியில் தனது கல்வியை தொடர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1991 ஆம் ஆண்டு முதல் 1994 ஆம் ஆண்டு வரையில் டெல்லி பல்கலைக்கழகத்தில் சமூகவியல் துறையில் ஹரிணி இளங்கலை பட்டத்தை கற்றுத் தேர்ந்தார்.

இந்த காலப்பகுதியில் அவர் தனது எதிர்காலத்தை பண்படுத்திக்கொண்டார் என அந்த இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் பிரதமராக ஹிந்து கல்லூரி மாணவி ஒருவர் பதவியேற்று கொண்டுள்ளமை மகிழ்ச்சியும் கௌரவமும் அளிப்பதாக ஹிந்து கல்லூரியின் முதல்வர் அஞ்சு சிறிவத்சவா தெரிவிக்கின்றார்.

ஹரிணி 1991 முதல் 1994 ஆம் ஆண்டு வரையில் சமூகவியல் இளங்கலை பட்ட கற்கை நெறியை ஹிந்து கல்லூரியில் கற்றார் ஹரிணியின் இந்த வெற்றிக்கு ஹிந்து கல்லூரியில் அவர் கற்றுக்கொண்ட பாடங்கள் வழியமைத்தது என  கருதுவதாக முதல்வர் சிறிவத்சவா தெரிவிக்கின்றார்.

ஹிந்து கல்லூரியில் கற்ற பலர் அரசாட்சி விவகாரங்களில் முன்னிலை வகிப்பதாக அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

ஹிந்து கல்லூரியில் கற்றவர்கள் அரசாங்கத்தின் உயர் பதவிகளை வகித்து வருவதாக அவர் தெரிவிக்கின்றார்.

ஹிந்து கல்லூரி மரபுகளின் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் கல்லூரியில் அரசாங்கம் ஒன்று அமைக்கப்படும் என்பதுடன் பிரதமர் ஒருவர் நியமிக்கப்படுவதுடன் எதிர்க்கட்சித் தலைவரும் ஒவ்வொரு ஆண்டும் நியமிக்கப்படுவார்.

ஹரிணியின் இந்த நியமனம் கல்லூரியின் வரலாற்றில் மற்றுமொரு மைல்கல் என அவர் தெரிவித்துள்ளார்.

கல்லூரி காலங்களில் ஹரிணி பல்கலைக்கழக விவாதங்கள், நிகழ்வுகளில் பங்கேற்று இருந்தார் என பாலிவுட் திரைப்பட இயக்குனரும் ஹரிணியின் சமகால பல்கலைக்கழக மாணவருமான நாளின் ராஜன் சிங் தெரிவிக்கின்றார்.

மாணவர்கள் பலர் ஹிந்து கல்லூரியில் தங்களது திறமைகளை  முதலில் வெளிக்கொணர்ந்ததாகத் தெரிவிக்கின்றார்.

இந்துக் கல்லூரியின் மாணவர் விடுதியின் தலைவராக தாம் கடமையாற்றியதாக அவர் குறிப்பிடுகின்றார்.

ஹரிணி அமரசூரியவை எதிர்காலத்தில் கல்லூரிக்கு அழைக்க வேண்டும் எனவும் அது அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஹரிணியின் நியமனம் இலங்கைக்கு இந்தியாவுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என பலர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

ஹரிணி பிரதமர் பதவியை மட்டுமின்றி நீதி, கல்வி, கைத்தொழில், விஞ்ஞானம், மற்றும் தொழில்நுட்பம், சுகாதாரம், முதலீடு உள்ளிட்ட பல்வேறு முக்கிய அமைச்சுப் பொறுப்புகளுக்கும் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது

பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LATEST ARTICLES