இலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதம் 14ம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.
புதிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தனது நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி நாடாளுமன்றை நேற்றைய தினம் நள்ளிரவு கலைத்துள்ளார்.
இது தொடர்பில் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
பொதுத் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 14ம் திகதி நடைபெறும் எனவும், 21ம் திகதி புதிய நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 4ம் திகதி தொடக்கம் 11ம் திகதி நண்பகல் 12 மணி வரையில் ஏற்றுக்கொள்ளப்பட உள்ளது.