இலங்கையில் பாரிய பிரச்சினையாக காணப்படும் கடவுச்சீட்டு விநியோகம் தொடர்பான பிரச்சனைக்கு விரைவில் தீர்வு வழங்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் இன்று தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் அக்டோபர் மாதம் 15 முதல் 20 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் நாட்டில் நிலவிவரும் கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்கான வரிசை நிலை இல்லாது ஒழிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லயில் அமைந்துள்ள பாதுகாப்பு அமைச்சில் தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை பெற்றுக் கொள்வதற்கு நிலவி வரும் வரிசையை இல்லாது ஒழிப்பதற்கு மாற்று யோசனைகளை சமர்ப்பிக்குமாறு தான் கோரியுள்ளதாகவும் இந்த மாற்று யோசனைகள் கிடைக்கப்பெற்றதும் பிரச்சனைக்கு தீர்வு வழங்கப்படும் எனவும் அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார்.