6.1 C
Switzerland
Friday, October 4, 2024

குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு விளக்க மறியல் உத்தரவு

Must Read

ஒன்லைன் வீசா வழங்குவது தொடர்பில் நீதிமன்றின் உத்தரவினை நடைமுறைப்படுத்தாத குற்றச்சாட்டின் பேரில் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டியவை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ச இவ்வாறு விளக்கமறியலில் வைக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இ-விசா வழங்கும் நடவடிக்கையை இரண்டு தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் முடிவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவை நடைமுறைப்படுத்த தவறியதன் மூலம் நீதிமன்றத்தை அவமதித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

குறித்த வழக்கு இன்று அழைக்கப்பட்ட போது குற்றப்பத்திரிகை வாசிக்கப்பட்டதை அடுத்து குடிவரவு குடியகழ்வு அதிகாரியை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த மனு ஜனவரி 22ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LATEST ARTICLES