சுவிட்சர்லாந்தில் சட்டவிரோதமான முறையில் தற்கொலைக் கூடு பயன்படுத்தி உயிரை மாய்த்துக் கொள்ள உதவிய சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வதையறா இறப்பிற்காக இந்த தற்கொலை கூடு உருவாக்கப்பட்டுள்ளது.
இதற்கு சார்கோ கேப்சூல் என பெயரிடப்பட்டுள்ளது.
சட்ட விரோதமான முறையில் இந்த தற்கொலைகூட்டை பயன்படுத்தியவர்கள் சுவிட்சர்லாந்து போலீசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜெர்மனி எல்லைப் பகுதியை அண்டிய Schaffhausen கன்டனில் மெரிஷாசுன் பகுதியில் இந்த தற்கொலை கூடு பயன்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு ஒருவர் தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சிலரை போலீசார் கைது செய்து செய்துள்ளனர்.
மெரிஷாசுன் இந்த தற்கொலை கூண்டு கருவியை பயன்படுத்தி ஒருவர் உயிரையும் மாய்த்துக் கொண்டதாகவும் இதற்கு சிலர் உதவியுள்ளதாகவும் பொலிஸார் குற்றம் சுமத்தியுள்ளனர்.
சம்பவம் குறித்து அறிந்து கொண்ட பொலிஸார் குறித்த இடத்திற்கு விரைந்துள்ளனர்.
இதன் போது உயிரிழந்த ஒருவரின் சடலத்தை மீட்டுள்ளனர்.
சடலம் பரிசோதனைக்காக சூழ்ச்சிக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.
இவ்வாறு தற்கொலை கூடு பயன்படுத்துவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.