லெபனான் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கான பயணங்களை மேற்கொள்வது தொடர்பில் சுவிட்சர்லாந்து பிரஜைகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெளிவிவகார அமைச்சு இது தொடர்பான எச்சரிக்கையை விடுத்துள்ளது.
ஹிஸ்புல்லா மற்றும் இஸ்ரேல் படையினருக்கு இடையில் இடம்பெற்று வரும் மோதல்களினால் நூற்றுக்கணக்கான மரணங்கள் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் குறித்த இரண்டு நாடுகளுக்குமான பயணங்கள் ஆபத்தாக அமையும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சு எக்ஸ் தளத்தில் விசேட எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
லெபனானில் தங்கி இருக்கும் சுவிஸ் பிரஜைகள் கூடிய சீக்கிரம் வெளியேற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
லெபனான் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளில் எந்த நேரத்திலும் ஆபத்துக்கள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சுற்றுலாந்து சர்வதேச விமான சேவை நிறுவனம் இஸ்ரேலுக்கான பயணங்களை இடைநிறுத்தி கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.