6.1 C
Switzerland
Friday, October 4, 2024

சுவிஸ் விமான சேவையை கடுமையாக விமர்சனம் செய்த பிரபலம்

Must Read

உலகின் முதல் நிலை ஆடம்பர ஆபரண நிறுவனங்களில் ஒன்றான புல்காரி (Bulgari) நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜேன் கிறிஸ்டோப் பாபின் இவ்வாறு விமான சேவை நிறுவனத்தை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

விமான சேவை நிறுவனத்தின் தரம் தொடர்பில் அவர் தனது கடுமையான விமர்சனங்களை வெளியிட்டுள்ளார்.

உலகின் செலவு கூடிய விமான சேவைகளில் ஒன்றாக குறிப்பிடப்படும் சுவிஸ் விமான சேவை நிறுவனம் உரிய சேவையை வழங்கத் தவறியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த விமான சேவை நிறுவனத்தின் சேவை மிகவும் சராசரியானது என குற்றம் சுமத்தியுள்ளார்.

விமானங்கள் பழையவை எனவும் அவற்றில் வழங்கப்படும் உணவு தரமற்றவை எனவும் உலகின் செலவு குறைந்த விமான சேவை நிறுவனங்களில் ஒன்றான ஈசி ஜெட் விமான சேவைக்கு நிகரான சேவையை சுவிஸ் விமான சேவை வழங்குவதாக குற்றம் சுமத்தியுள்ளார்.

விமான சேவையில் பயணம் செய்யும் பயணிகள் தரமற்ற சேவையின் பணய கைதிகள் என அவர் விவரித்துள்ளார்.

புல்காரி நிறுவனம் இவ்வாறு தரமற்ற சேவையை வழங்கினால் பாரிய பிரச்சினைகளை அது எதிர்நோக்கி இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

விமான சேவை நிறுவனங்கள் தரமற்ற செய்தியை வழங்கும் போது அவை தண்டிக்கப்படுவதில்லை என தனது கரிசனையை வெளியிட்டுள்ளார்.

விமானம் புறப்படுவதற்கு மூன்று மணித்தியாலங்களுக்கு முன்னதாக சுவிஸ் விமான சேவை, பயணம் ரத்து செய்யப்படுவதாக தனது மனைவிக்கு சுவிஸ் விமான சேவை அறிவித்தது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதனால் அடுத்த நாள் வரையில் ஜெனீவாவிற்கு தனது மனைவியினால் பயணிக்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

மேலும் விமான பயணம் ரத்து செய்யப்பட்டமைக்காக எவ்வித நட்டையீடும் வழங்கப்படவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இது விமான சேவை நிறுவனத்தின் தரம் குறைந்த சேவையை வெளிப்படுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

விமான சேவை நிறுவனம் தனது நன்மதிப்பை சீர்குலைத்து வருவதாக மற்றுமொருவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

சமூக ஊடகமொன்றின் மூலம்  அவர் இவ்வாறு அவர் இவ்வாறு சுவிஸ் விமான சேவையை கடுமையான சாடியுள்ளார்.

இந்த பதிவிற்கு ஆதரவாக சிலர் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

மெர்சிடிஸ், ஆப்பிள் மற்றும் சுவிஸ் போன்ற பெரு நிறுவனங்கள் அண்மைக்காலமாக வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை வழங்குவதிலிருந்து விலகிச் செல்வதாக அமெரிக்காவின் கைக்கடிகார உற்பத்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஈசிஜெட் விமான சேவை, சுவிஸ் விமான சேவையை விட சிறந்த சேவையை வழங்கி வருவதாக மற்றுமொருவர் தெரிவித்துள்ளார்.

எனினும் இந்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து சுவிஸ் விமான சேவை நிறுவனம் அதிகாரபூர்வமாக இதுவரையில் எவ்வித பதில்களையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LATEST ARTICLES